தமிழகத்தில் 9, 10 ,11, 12ம் வகுப்புகளுக்கு நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக எழுந்த பல்வேறு எதிர்ப்புகளால் தமிழக அரசு நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஆனால் முதுநிலை இறுதியாண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் இரண்டாம் தேதி முதல் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மற்ற மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது ஆரம்பிக்கும் என்ற அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment