தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உலகமெல்லாம் கணினி வழி தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவோருக்கு விருது தொகையாக ரூபாய் ஒரு லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என 14.5 .2013ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.
அதன்படி ஆண்டுதோறும் சிறந்த மென்பொருள் தெரிவு செய்யப்பட்டு மென்பொருளை தயாரித்தார் தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டு கூறிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனியார் மற்றும் நிறுவனத்திடமிருந்து தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள் வரவேற்கப்படுகின்றன.
முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருட்கள் 2017 ,2018, 2019 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். மேலும் இவ்விருது கூடிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்த விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்கத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 31-12-2020.
அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ் வளர்ச்சி இயக்குனர்
தமிழ் வளர்ச்சி வளாகம்
தமிழ்ச் சாலை ,எழும்பூர்,
சென்னை- 600 008.
No comments:
Post a Comment