அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுமா? - Kalvimurasutn

Latest

Thursday, November 19, 2020

அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுமா?

 


அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்' என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறியதாவது: அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 5.18 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடால் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

பள்ளிகள் திறக்கப்பட்டால் கிடைக்கும் குறைந்த நாட்களில் கற்பித்தல் பணிக்கு மட்டும் திட்டமிட வேண்டும். இதனால் பொது மாறுதல் கலந்தாய்வு, ஆசிரியர்களுக்கான உட்கட்டமைப்பு மேம்பாடுகளை கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்றார்

No comments:

Post a Comment