நாடுமுழுவதும் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வியாழனன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடுமுழுவதும் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு புதிய முன்னெடுப்பு ஒன்றினைச் செய்ய உள்ளது.
அதன்படி தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி வழங்குவது தொடர்பான நடைமுறைகளை வகுக்க, ஐஐடி மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அவை தரும் வழிகாட்டுதல்களின்படி வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் முறை நாடுமுழுவதும் அமலுக்கு வரும். என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment