கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில்,
பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையின் பேரிலேயே பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஏற்கனவே பல மாதங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மூடியுள்ளது என்றும், இணையத்தளம் வாயிலாக பாடம் நடத்தப்பட்டாலும் அவர்களுக்கு சந்தேகம் மற்றும் புரிந்துகொள்ள முடியாத சூழல் உள்ளதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் கவனத்தில் வந்தது.
கொரோனா குறைத்துக்கொண்டு இருப்பதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். இதன் பேரிலேயே பள்ளிகளை திறக்க அறிவிப்பு வெளியிட்டோம். ஆனால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் என்று கூறுவதால், அதனையும் கவனத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் " என்று தெரிவித்தார்
No comments:
Post a Comment