ஜனவரி 3ம் தேதி குரூப்-1 தேர்வு நடக்கும்நிலையில் திடீரென்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் one time registration ஐடியுடன் ஆதார் கார்டு எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பதவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் அறிவித்துள்ளதால் தேர்வாளர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க முடியாமலும், ஹால்டிக்கெட்டை பதவிறக்கம் செய்ய முடியாமலும் தவிக்கிறார்கள்.
நடப்பு ஆண்டு கடந்த ஜனவரி மாதம் குரூப்-1 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு கடந்த ஏப்ரல் 5ம் தேதி நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா ஊரடங்கால் தேர்வு மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கரோனா கட்டுக்குள் வந்ததால் ஜனவரி 3ம் தேதி குரூப் -1 தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ள தேர்வாணையம் கூறியுள்ளது. ஆனால், திடீரென்று எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் one time registration ஐடியுடன் ஆதார் கார்டு எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பதவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் கூறியுள்ளதால் ஹால்டிக்கேட்டை பதவிறக்கம் செய்ய முடியாமல் தேர்வர்கள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து குரூப்-1 தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள மதுரையை சேர்ந்த மு.ர.சரணவன் கூறுகையில், ''தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வு அறிவிப்பில் ஆதார்கார்டு எண்ணை இணைக்க எந்த தகவலும் குறிப்பிடவில்லை. தேர்வுக்கு குறுகிய காலமே இருக்கும்நிலையில் திடீரென்று ஆதார்கார்டை எண்ணை தேர்வரின் டிஎன்பிசி ஐடியுடன் இணைத்தால் மட்டுமே ஹால்டிக்கெட் பதவிறக்கம் செய்ய முடியும் எனக்கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
ஆதார் சட்டங்களின் படி ஆதார் எண் எந்தவொரு தேர்வுக்கும்தகுதியில்லை. உச்சநீதிமன்றம் பல்வேறு இடங்களில் இதனை சுட்டிக் காட்டியுள்ளது. அப்படியிருக்கையில் ஒரு தேர்வர் தேர்வினை எழுதமுடியாமல் போகும்பட்சத்தில் அது சட்டங்களுக்கு புறம்பான ஒன்றாகிவிடம். ஆதார் எண் இணைப்பு பல்வேறு துறைகளும், தொழில்நுட்பங்களும் சார்ந்த விஷயம். மேலும், பல்வேறு நபர்களுக்கு ஆதார் எண்ணில் விவரங்கள் பிழையாகவோ, தவறாகவோ இருக்கலாம்.
இன்னும் சிலருக்கு ஆதார் எண் கூட இல்லாமல் இருக்கலாம். உடனடியாக ஆதார் எண்ணை லிங்க் செய்ய முடியாமல் போகலாம். மேலும், one time registrationஎனப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் ஐடி 5 ஆண்டிற்கு ஒரு முறை தேர்வர்கள் புதுப்பிக்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட கட்டணத்தினை தேர்வர்கள் இணைய வழியில் செலுத்த வேண்டும். தற்போது one time registration புதுப்பித்திட தேர்வர்கள் முயலுகையில் பணம் வங்கியில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டபின்னரும் அது புதுப்பிக்கப்படாமல் உள்ளது. எத்தனை முறைககள் முயன்றாலும் அத்தனை முறையும் வங்கியிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது. ஆனால், one time registration புதுப்பிக்கப்படுவதில்லை.
ஆதார் கார்டு எண்ணை இணைத்திருந்தாலும் இந்த one time registration புதுப்பித்திருந்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டை பதவிறக்கம் செய்ய முடியும். குரூப்1 தேர்வுக்கு மிக குறுகிய காலமே உள்ளநிலையில் தேர்வர்கள் தேர்வுக்கு படிப்பார்களா? அல்லது அந்த தேர்வை எழுதுவதற்கு ஹால்டிக்கெட் பெற போராடுவார்களா?. அதனால், தேர்வு தயாரிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளோம்'
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment