பொதுத்தேர்வு எப்போது ? அமைச்சர் விளக்கம் - Kalvimurasutn

Latest

Thursday, December 24, 2020

பொதுத்தேர்வு எப்போது ? அமைச்சர் விளக்கம்

 



சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவதா என, முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம்  நம்பியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் - 

தை பொங்கல் பரிசாக, 2,500 ரூபாயை, அரசு உங்களுக்கு தருகிறது. தமிழகத்தில் இன்னும் பல திட்டங்கள் உங்களை நோக்கி வரப்போகிறது. நீங்கள் பார்த்து கொண்டே இருங்கள். இந்த அரசு இன்னும் மக்களுக்காக என்னென்ன செய்யப்போகிறது என்று சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவதா என்பது குறித்து, முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம். ஆனால், இன்னும் அதுகுறித்து எந்த முடிவுகளும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment