தமிழகத்தில் உள்ள பல கலைக்கழகங்களில் நடப்பு செமஸ்டருக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடக்க இருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது. இறுதி செமன்டர் தேர்வை தவிர, மற்ற செமஸ்டர் செமஸ்டர் தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கு முந்தைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் உள் மதிப்பீடு மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டன.
இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு தேர்வு ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் இந்த நடப்பு செமஸ்டர் காண தேர்வுகள் நடத்துவது குறித்து பல்கலைக்கழகங்கள் ஆலோசித்து வந்தன. அதனடிப்படையில் செமஸ்டர் தேர்வுக்கான கால அட்டவணையை அரசிடம் சமர்ப்பித்து உள்ளன. அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு கால அட்ட வணை விவரம் வருமாறு:
அண்ணா பல்கலைக்கழகம் 2.1.2021 முதல் 20.1.2021 வரை,
அண்ணாமலை பல்கலைக்கழகம் -10.12.2020 முதல் 26.12.2020 வரை,
அழகப்பா பல்கலைக்கழகம் - 12.12.2020 முதல் 20.12.2020 வரை,
பாரதியார் பல்கலைக்கழகம் 23.12.2020 முதல் 31.12.2020 வரை,
பாரதிதாசன் பல்கலைக்கழகம் -9.12.2020 முதல் 24.12.2020 வரை,
சென்னை பல்கலைக்கழகம் - 21.12.2020 முதல் 6.1.2021 வரை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 14.12.2020 முதல் 31.12.2020 வரை,
மனோன்மணியம் சுந்த ரனார் பல்கலைக்கழகம் 14.12.2020 முதல் 31.12.2020 வரை
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் 16.12.2020 முதல் 23.12.2020 வரை,
பெரியார் பல்கலைக்கழகம் 21.12.2020 முதல் 31.12.2020 வரை,
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 14.12.2020 முதல் (அனைத்து தேர்வுகளையும் முடிக்க 23 வேலை நாட்கள் தேவை)
தமிழ் நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் 17.12.2020 முதல் 31.12.2020 வரை,
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் -16.12.2020 முதல் 31.12.2020 வரை .
No comments:
Post a Comment