நாட்கள் குறைவாக உள்ளதால் பாடத்திட்டம் மேலும் குறைய வாய்ப்பு. - Kalvimurasutn

Latest

Sunday, December 6, 2020

நாட்கள் குறைவாக உள்ளதால் பாடத்திட்டம் மேலும் குறைய வாய்ப்பு.

 




கொரானா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

 மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான நாட்கள் இன்னும் முடிவு செய்யப்படாததால் வேலை நாட்கள் குறைந்து கொண்டே வருகின்றது.

தமிழக அரசால் பள்ளி பாடத்திட்டத்தில் ஏற்கனவே 40% குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கோபிச்செட்டிபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் நாட்கள் சென்று கொண்டே இருப்பதால் மேலும் பள்ளி  பாடத்திட்டம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அது பற்றி ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

விரைவாக நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment