ஆதார் அட்டையில் திருத்தங்களை இனி ஆன்லைனில் செய்யலாம் என்று தனித்துவ தகவல் அடையாள ஆணையம் (unique identification authority of India - UIDAI) அறிவித்துள்ளது.
ஆதார் அட்டையை வழங்கும் இந்த அரசு அமைப்பு கோவிட் பரவல் காரணமாக வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் ஆதார் அட்டையில் திருத்தங்களை செய்வதற்கு இந்த ஆன்லைன் சேவையைத் தொடங்கியுள்ளது.
வீட்டில் அமர்ந்தபடியே இனி ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதி, முகவரி, மொழி போன்றவற்றை திருத்தம் செய்யுமாறு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதாருடன் இணைத்துள்ள அதிகாரப்பூர்வமான தொலைபேசி எண் பயன்படுத்தப்பட வேண்டியது கட்டாயம். அதில் வரும் ஓடிபியைக் கொண்டு மாற்றங்களை செய்யலாம்.
No comments:
Post a Comment