கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் ( 2019-2020 ) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வும் ரத்து செய்யப்பட்டது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது. இதேபோல் நடப்பு கல்வியாண்டிற்கான ( 2020-2021 ) 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து தமிழக அரசு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதனிடையே சிபிஎஸ்இ பள்ளிகளிலும் கடந்த கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன.
இறுதியில் இந்தத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அக மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் நடப்பாண்டுக்கான சிபிஎஸ்இ பொது தேர்வுகள் குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்! 2020 – 2021 ஆம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12வது வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி, வரும் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment