பள்ளி கட்டணத்தை காரணம் காட்டி ஆன்லைன் வகுப்பை நிறுத்தினால் நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் - Kalvimurasutn

Latest

Wednesday, December 23, 2020

பள்ளி கட்டணத்தை காரணம் காட்டி ஆன்லைன் வகுப்பை நிறுத்தினால் நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்

 



கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி, ஆன்லைன் வகுப்பை நிறுத்தினால், அப்பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடில், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:தமிழகத்தில், 2,900 பள்ளிகளுக்கு அங்கீகார சான்று வழங்கப்பட்டுள்ளது. 

அடுத்த, ஆறு மாதங்களில் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாக உள்ளன. இதன் வாயிலாக, படித்த இளைஞர்கள், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அதிக கட்டணம் வசூலிப்பதாக, 14 பள்ளிகள் மீது புகார் வந்தது. அக்கட்டணத்தை திரும்ப செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

சில பள்ளிகளில் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்த வில்லை என்பதால், அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டதாக, புகார் வந்தது. அவ்வாறு நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment