ரூ.1.7 கோடி செலவில் 3 லட்சம் அரசு ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வருகை பதிவு திட்டத்தை அமலாக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதமே இதை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது
கொரோனாவைரஸ் பரவல் காரணமாக இது தாமதமாகி விட்டது. எனினும் வரும் கல்வியாண்டு முதல் இது முழுவீச்சில் அமலாக்கப்படும் என்று உறுதியாகத் தெரிகிறது
ஆசிரியர்கள் பள்ளிக்கூடங்களுக்கு குறித்த நேரத்தில் வருகிறார்களா? பணி நேரம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றுகிறார்களா? என்பதை உறு திப்படுத்தக்கூடிய வகையில் ஸ்மார்ட் கார்டுகளை கடந்த மார்ச் மாதமே அறிமுகப்படுத்த மாநில கல்வித்துறை உத்தேசித்திருந்தது
தமிழ்நாட்டில் 37,300 அரசு தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள் ளிக்கூடங்கள் உள்ளன. இவை தவிர அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களின் எண் ணிக்கை 8, 400 என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸ் பல்வேறு துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு கல்வித்துறையும் விதிவிலக்கு அல்ல கடந்த மார்ச் மாதமே ஸ்மார்ட் கார்டு வருகை பதிவு அமலாக்கப்பட இருந்த நிலையில், கொரோனா வைரஸ் உக்கிரம் அடைந்ததையடுத்து இத்திட்டம் தள்ளிப்போடப்பட்டது.
ஏறத்தாழ ஓராண்டு கடந்துவிட்டது.எனினும் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக விலகி விடவில்லை . ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு பதிவை உறுதிப்படுத்தும் வகையில் நவீன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.1.7 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு விநியோகிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இம்மாதம் 31 ம் தேதிக்குள் இது நிறைவடைந்து விடும் என்று கூறப்படுகிறது
இன்னும் சில மாதங்க ளில் ஸ்மார்ட் கார்டு வருகை பதிவு முறை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.
எப்படியும் அடுத்த கல்வியாண்டில் இருந்து எல்லா பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்களுக்கான ஸ்மார்ட் கார்டு வருகை பதிவு உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment