அன்பார்ந்த TNPSC தேர்வர்களே..
TNPSC ன் புதிய நடத்தை விதிகளின்படி
உங்கள் நிரந்தரகணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
TNPSC ல் ஆதார் இணைப்பு செய்ய கடைசி தேதி 31.12.2020.
ஆதார் எண்ணை இணைப்பு செய்யும் போது ஆதார்கார்டிலுள்ள நம்பருக்கு OTP வரும்.
அந்த OTP மூலமாகத்தான் TNPSC-ல் பதிவு செய்ய முடியும்.
ஆதார் கார்டில் கொடுத்துள்ள போன் நம்பர் வச்சிருந்தா சரி ஒருவேளை அந்த நம்பர் இல்லையென்றால் ஆதார் கார்டில் போன் நம்பர் மாற்றம் செய்ய ஒருவாரம் ஆகும்.
ஆதார் கார்டில் TNPSC-ல் எப்படி பெயரை பதிவு செய்துள்ளீர்களோ அதன்படி தான் ஆதார்கார்டிலும் ஒரு எழுத்து கூட மாறாமல் பதிவு செய்யவேண்டும்.
ஒருவேளை ஆதார்கார்டில் பெயர் மாறி அல்லது ஒரு எழுத்து மாறி இருந்தால் நமது அசல் மதிப்பெண்சான்றிதழ் கொண்டு மாற்றலாம்.
ஆனால் அதற்கு எடுத்துக்கொள்ளும் காலவரம்பு 15 தினம்.
அதனால் டிசம்பர் கடைசி தினங்களில் மாற்றம் செய்யலாம் என நினைத்து மெத்தனமாக இருக்கவேண்டாம்.
அதற்குரிய வேலையை தாமதமின்றி ஆரம்பியுங்கள்.
Tnpsc தேர்வாணையத்தில் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்று பார்ப்போம்.
தேர்வாணையத்தின் நிரந்தர பதிவு Login Id மற்றும் Password Enter செய்து Login செய்யவும்.
https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==
பிறகு உங்கள் ஆதார் எண் மற்றும் ஆதார் எண்ணில் உள்ளபடி உங்கள் பெயரை Enter செய்ய வேண்டும்.
இறுதியாக உங்கள் ஆதார் எண்ணில் பதிவாகியுள்ள அலைபேசி எண்ணிற்கு 6 இலக்க குறுந்தகவல் வரும் அதனை Enter செய்ய வேண்டும். அதன் பிறகு Successful Verified Aadhar என வரும்.
No comments:
Post a Comment