6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை. - Kalvimurasutn

Latest

Thursday, December 3, 2020

6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை.

 வங்க கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை பாம்பன் – கன்னியாகுமரி இடையே தென் தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என இந்திய வனைலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் புயல் கரையை கடக்கும்போது பெரும் மழைக்கும் புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரியில் ஒரு சனிக்கிழமை வேலை நாள் இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பணிகள் தவிர, பிற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment