மாறுதலில் சென்ற பள்ளிக்கு பணிப்பதிவேடு, சம்பள பட்டியலை அனுப்ப தலைமை ஆசிரியர் மறுப்பதால், சம்பளம் பெற முடியவில்லை என, கொல்லிமலைக்கு மாறுதலில் சென்ற ஆசிரியர் CEO விடம் புகார் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த கோட்டப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆரியர் சுப்ரம ணியன். இவருக்கும், அப் பள்ளியில் பணியாற்றி வந்த பட்ட் ரி அசிரியர் தனபால்(28) என்பவருக்குமிடையே, கடந்த 3 ஆண்டாக பணிப்போர் நிலவி வந்தது. ஆசிரியர் தகுதி காண் பருவம் பெறுவதற்கான பரிந்துரையை, தலைமை ஆசிரியர் சுப்ரமணியம் செய்து கொடுக்கவில்லை.
இதனால், மன உளைச்சல் அடைந்த அசிரியர் தனபால், இதுகுறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து சிஇஓ அய்யண்ணன்னின் பரிந்துரைப்படி, கொல்லிமலை யில் உள்ள அரசு மாதிரி பள்ளிக்கு, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் இடமாறுதல் செய்து உத்தர விட்டார். மேலும், அந்த பள்ளியில் பணியாற்றி வந்த ஆங்கில ஆசிரியை, கோட்டபாளையத்துக்கு இடமாறுதல் செய்யப்பட் டார்.
கொல்லிமலை மாதிரி பள்ளியில் ஆசிரியர் தன பால் பணியில் சேர்ந்து 2 மாதமாகியும், அவரது பணிப்பதிவேடுஎஸ்.ஆர்), சம்பள பட்டியல் ஆகியவற் றையும் கோட்டப்பாளை யம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், கொல்லிமலை மாதிரி பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்ப மறுத்து வருகிறார். இத னால், ஆசிரியர் தனபால் கடந்த 2 மாதமாக சம்பளம் பெற முடியாமல் தவிக்கிறார்.
இதுகுறித்து மீண்டும் முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணனி டம், ஆசிரியர் தனபால் புகார் அளித்துள்ளார். கொரோனளா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது. ஆனால், மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஆசிரிய ருக்கும், தலைமை ஆசிரிய ருக்கும்இடையே நடக்கும் மோதல், கல்வித்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
No comments:
Post a Comment