வரும் ஜனவரி மாதம் 15 -ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடக்கபடும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. இதனிடையே, கடந்த நவம்பர் 16- ம் தேதி முதல் 9 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனிடையே, எதிர்க்கட்சிகள், பெற்றோர்கள் எதிர்ப்பால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இந்நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும் என தெரிவித்தார்
மேலும், ஜனவரி 20 -க்குள் 7,500 பள்ளிகளில் பயிற்சியாளர் உடன் கூடிய அறிவியல் ஆய்வுக்கூடங்களும் உரிய வசதிகளுடன் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment