தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் - செய்தி வெளியீடு
செய்தி வெளியீட்டு எண்: 55/2020
நாள்: 26.12.2020
ஆதார் குறித்த விவரங்கள் தங்களது ஒருமுறைப்பதிவு / நிரந்தரப்பதிவு (ONE TIME REGISTRATION-OTR) கணக்குடன் இணைக்கப்பட வேண்டும் என தேர்வாணையம் 07.02.2020 நாளிட்ட செய்தி வெளியீடு மூலமாகவும், 24.03.2020 அன்று வெளியிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளின் மூலமாக இதற்கான கடைசி நாள் 31.07.2020 எனவும் தெரிவித்திருந்தது மேலும் 15.07.2020 அன்று வெளியிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் இதற்கான கடைசி நாள் 31.12.2020 என குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும், 06.11.2020 நாளிட்ட செய்தி வெளியீடு மூலமாகவும், அறிவுறுத்தப்பட்டிருந்தது
இந்த நடைமுறை தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களில் ஒன்று. இதுவரை, 14 லட்சம் தேர்வர்கள் (இதில் 70,000க்கும் மேற்பட்டோர் கடந்த 4 நாட்களில், அதாவது 23.12.2020 முதல் இன்று வரை) தங்களது ஆதார் குறித்த விவரங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பல தேர்வர்கள் 03.01.2021 அன்று நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 (Group-1) முதனிலைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் உள்ளன என முறையிட்டுள்ளனர்
தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த நடைமுறையை தற்காலிகமாக தளர்த்த தேர்வாணையம் முடிவெடுத்துள்ளது. எனவே நாளை (27.12.2020) முதல் OTR மூலம் எல்லாம் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, 03.01.2021 அன்று நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 (Group-1) முதனிலைத்தேர்வுக்கும் மற்றும் 09.01.2021 & 10.01.2021 அன்று நடைபெறவுள்ள உதவி இயக்குனர் (தொழில் மற்றும் வணிகம்) என்னும் பதவிக்கான தேர்வுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
மேலும், ஆதார் குறித்த விவரங்கள் தங்களது OTR கணக்குடன் இணைக்கத் தவறிய அல்லது இணைக்க இயலாத தேர்வர்களின் நலனுக்காக அவ்வாறு இணைப்பதற்கான கடைசி தேதி 31.01.2021 வரை நீட்டிக்கப்படுகிறது
இனிவருங்காலங்களில் தேர்வாணையத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டுமென்றாலோ அல்லது நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்றாலோ, ஒருமுறைப்பதிவு | நிரந்தரப்பதிவு (OTR) மூலம் ஆதார் குறித்த விவரங்களை இணைத்த பிறகே அவ்வாறு செய்ய இயலும். எனவே, தேர்வாணையத்தில் OTR வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 31.01.2021 ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
மேலும், இது குறித்த கூடுதல் விளக்கம் தேவைப்படின் விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002ல் அலுவலக நேரங்களில் (from 10.00 AM to 05.45 PM) எல்லா வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளவும் மற்றும் தேர்வாணைய மின்னஞ்சல் (Contacttnpsc@gmail.com) வாயிலாகவும் தொடர்பு கொண்டு உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
இரா. சுதன், இ.ஆ.ப தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்
No comments:
Post a Comment