CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ல் வெளியீடு. - Kalvimurasutn

Latest

Thursday, January 28, 2021

CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ல் வெளியீடு.

 


சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் ஜனவரி முதல் திறக்கப்பட்டு வருகின்றன. இடைப்பட்ட காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாத காரணத்தால் சிபிஎஸ்இ பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன.


இந்நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் வெளியிட்டுள்ளார்.


No comments:

Post a Comment