அரசு குழந்தைகள் காப்பகங்களில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருப்பதாவது: சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் 36 அரசு குழந்தைகள் இல்லங்களில் தங்கி படிக்கும் குழந்தைகளுக்கு, ஆற்றுநர்கள் மூலம் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஒரு பெண் பணியாளர் உட்பட 3 ஆற்றுப்படுத்துநர் பணியிடங்கள் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகிய கல்வியில் முதுகலை பட்டம் பெற்ற நபர்கள் இப்பணிக்கு வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு குழு மூலம் நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு, வருகையின் மதிப்பூதிய அடிப்படையில் சேவை வழங்க ஒரு வருகைக்கு நாள் ஒன்றுக்கு போக்குவரத்து செலவு உட்பட ₹ஆயிரம் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ள நபர்கள், திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி அருகே செயல்படும் அரசு குழந்தைகள் காப்பகத்துக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment