சேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்கு சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கம் காரணமாகவும் தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும் கடந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன . தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து பொது முடக்கத்தில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் சேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனாலும் சக மாணவர்களும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து சம்பந்தப்பட்ட அந்தப் பள்ளி மூடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment