10, 12-ம் வகுப்பு தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சியா? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் - Kalvimurasutn

Latest

Thursday, January 21, 2021

10, 12-ம் வகுப்பு தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சியா? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்

 10, 12-ம் வகுப்பு தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சியா? (Passed without exam?) அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்  



தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்புகளை தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்கப்படுமா? என்பது குறித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளித்து உள்ளார். 

தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு 92 சதவீதம் மாணவர்கள் வருகின்றனர். 

மீதமுள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கூடத்துக்கு அழைக்கப்படுவார்கள். வாரத்தில் 6 நாட்கள் பள்ளிக்கூடங்கள் நடைபெறும். 

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பள்ளிக்கூடங்கள் செயல்படும். மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி தினமும் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் நடைபெறும். 

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 10, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதி, அதற்கான அட்டவணை வெளியிடப்படும். 

 இவ்வாறு அவர் கூறினார். 


பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்தார். 

அதன் விவரம் வருமாறு:- 


 கேள்வி: 


10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் நடத்த முடியாது என கல்வியாளர்கள் கூறி வருகிறார்கள். அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’. 


 பதில்:


 ‘இந்த பாடத்திட்டங்களை படித்தால் தான் மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் சுலபமாக சந்திக்க முடியும்’. 


 கேள்வி: 


மற்ற வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படுமா? அல்லது அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்களா?. 


 பதில்:


‘பொறுத்திருந்து பாருங்கள்’.


நன்றி தினத்தந்தி

No comments:

Post a Comment