கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் பட்டமேற்படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறந்தன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி திறப்பது எப்போது என்பது குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார் முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்க நடைமுறைகள் முடிவடைந்து தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு கல்லூரி திறப்பது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார் மேலும் ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம் காலை மாலை என இரண்டு வேளைகள் வகுப்புகள் நடத்துவது பற்றிய ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் இது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் இதனை அடுத்து விரைவில் முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி வகுப்புகள் திறப்பு குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment