முக கவசத்துக்கு பதில் கைக்குட்டை - பள்ளி கல்வி இயக்குநர் எச்சரிக்கை - Kalvimurasutn

Latest

Friday, January 29, 2021

முக கவசத்துக்கு பதில் கைக்குட்டை - பள்ளி கல்வி இயக்குநர் எச்சரிக்கை

 


பள்ளி மாணவர்கள் முக கவசம் அணிவதற்கு பதில், கைக்குட்டைகளை முகத்தில் சுற்ற, பள்ளி கல்வித்துறை தடை விதித்துள்ளது.

தமிழகம் முழுதும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜன., 19ல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளில், மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்காத வகையில், தடுப்பு விதிகளை பின்பற்ற, அரசு அறிவுறுத்தியுள்ளது. சில இடங்களில் முக கவசம் கூட அணியாமல், மாணவர்கள் பள்ளிக்கு வருவதாக, புகார்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முதன்மை கல்வி அலுவலர்கள் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், தனியார் பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை, கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.

இந்நிலையில், பெரம்பலுார் அரசு உயர்நிலை பள்ளி உள்பட, பெரம்பலுார் மாவட்ட பள்ளிகள், அரியலுார், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளில், மாணவர்கள் முக கவசம் அணிவதில்லை என, தெரியவந்துள்ளது.மேலும், முக கவசத்துக்கு பதில், மாணவர்கள் தங்கள் முகத்தில் கைக்குட்டைகளை வைத்து மூடியபடி வருகின்றனர்.

எனவே, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும், இதுகுறித்து உரிய கவனம் எடுத்து, அரசின் விதிகளை மாணவர்கள் கட்டாயம் பின்பற்றவும், மாணவர்கள் முக கவசம் அணிந்து வரவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment