அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை 60% குறைவு – ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அறிக்கை!!
பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் வருகைப்பதிவு 60% முதல் 70% சதவிகிதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் வருகைப்பதிவு குறைவு :
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட பள்ளிகள் முதல் நாளில் மட்டும் 85% மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல மாணவர்களின் வருகை குறைந்தது. சில மாணவர்கள் சீருடை இல்லாத காரணத்தை கூறியுள்ள நிலையில் அரசு சீருடை கட்டாயமில்லை என்று அறிவிப்பு வெளியிட்டது.
10,12 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தொடங்கின.
மேலும் வருகைப்பதிவு கட்டாயமில்லை எனவும் மாணவர்கள் தங்களது விருப்பத்தின் படி பள்ளிக்கு வரலாம் என அறிவிப்பு வெளியான காரணத்தால் மாணவர் வருகை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் சில சிறிய கிராமங்களில் இன்னும் பேருந்து சேவை இயக்கப்படாததால் பல கிலோமீட்டர் நடந்து பள்ளிக்கு செல்லவேண்டிய நிலைமை உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் வருகைப்பதிவு அதிகமாக உள்ளது. காரணம் தனியார் பள்ளிகள் கொரோனா காரணமாக மாணவர்களின் நலனுக்காக சானிடைசர்கள், உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி போன்றவற்றை தங்களது செலவில் உபயோகப்படுத்துகிறார்கள். அரசு பள்ளிகளும் அதே போல செயல்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் முழு நேர பேருந்து வசதி கொண்டு வர வேண்டும். சீருடை, வருகைப்பதிவு கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே பள்ளிகளில் ஒழுக்கம் கடைபிடிக்கப்படும்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment