இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவை திட்டத்தை அட்வென்ச்சர் ஓவர்லேண்ட் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவர்களுக்கு தற்போது ஒரு சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது. என்னவென்றால் நீங்கள் பஸ்ஸிலே சிங்கப்பூருக்கு சென்று விடலாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம் குருகிராமிலிருந்து ஒரு பயண நிறுவனம் அண்மையில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையை ஆரம்பிக்க போவதாக அறிவித்தது. இந்த பேருந்து மூன்று நாடுகள் வழியாக சிங்கப்பூருக்கு செல்லும். இந்த அறிவிப்பை அட்வென்ச்சர் ஓவர்லேண்ட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனம் இதற்காக டிக்கெட் பதிவு செய்யும்படி மக்களிடம் கேட்டுக் கொள்கிறது. இந்த பேருந்து பயணம் மணிப்பூரில் உள்ள இம்பாலில் தொடங்கி மியான்மர், தாய்லாந்து, மலேசியா வழியாக சிங்கப்பூரை சென்றடையும், இந்ந பேருந்து பயணம் நவம்பர் 14ம் தேதி இம்பாலில் இருந்து தன்னுடைய பயணத்தை ஆரம்பிக்கும். முதன்முதலாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மொத்தம் 48 ஆயிரம் கிலோ மீட்டர் கொண்ட இந்த பயணம் 20 நாட்களில் முடிவடையும். இதில் பஸ்ஸில் பயணம் செய்ய விரும்பும் நபர்கள் ரூபாய் ஆறு லட்சத்து 25 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் விசா, ஹோட்டல், நிலையான சுற்றுலா விசா எல்லாம் அடங்கிவிடும். இந்த நிறுவனம் ஏற்கனவே டெல்லியில் இருந்து லண்டனுக்கு பேருந்து சேவை திட்டங்களை அறிவித்தது. இது உலகின் மிக நீண்ட சாலை பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment