ஆந்திராவில் தொடக்கப் பள்ளிகள் வரும் திங்கள் கிழமை முதல் திறப்பு - Kalvimurasutn

Latest

Saturday, January 30, 2021

ஆந்திராவில் தொடக்கப் பள்ளிகள் வரும் திங்கள் கிழமை முதல் திறப்பு

 


ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

கொரோனா தொற்று அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முன்னதாக பள்ளி, கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டன. தொற்று குறையத்தொடங்கியதும் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளி, கல்லூரிகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்படி, ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளுக்கு பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான அனுமதியை ஆந்திர அரசு வழங்கியுள்ளது. நாள் முழுவதும் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment