பள்ளிகள் திறப்பு! பள்ளிக்கு வரத் தொடங்கிய மாணவர்கள் - நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை - Kalvimurasutn

Latest

Tuesday, January 19, 2021

பள்ளிகள் திறப்பு! பள்ளிக்கு வரத் தொடங்கிய மாணவர்கள் - நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை

 


தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதே கேள்விக்குறியானது. இதையடுத்து 2020-21-ம் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்-லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் மூலமாகவும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வந்தனர். மாணவ-மாணவிகளை பள்ளி நுழைவு வாயிலில் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி அளிக்கப்பட்டது. கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின் மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்க 6 அடி இடைவெளியில் வட்டம் வரையப்பட்டுள்ளது. நண்பர்கள் ஆசிரியர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment