ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டுக்கான பள்ளிகள் துவங்கும் அதிரடி அறிவிப்பு. - Kalvimurasutn

Latest

Friday, February 12, 2021

ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டுக்கான பள்ளிகள் துவங்கும் அதிரடி அறிவிப்பு.

 சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பெற்றோர்கள் கருத்து கேட்பிற்கு பின்னர் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


இதனால் சிபிஎஸ்இ 9 மற்றும் 11ஆம் வகுப்புகளின் இறுதித்தேர்வுகளை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடத்த வேண்டும் என்றும், மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment