பள்ளிகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி: பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை - Kalvimurasutn

Latest

Friday, February 12, 2021

பள்ளிகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி: பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை

 


திரையரங்கம் மற்றும் பஸ்களில் உள்ளதை போல, பள்ளிகளிலும், 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தும் வகையில், கொரோனா விதிகளை மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் கட்டுப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளுக்கும், நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன. வாரத்தில் ஆறு நாட்களும் கல்லூரிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல , ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன . 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் துவங்கி ஒரு மாதத்தை தாண்டி விட்ட நிலையில், மாணவர்களிடம் கொரோனா தாக்கம் எதுவும் இல்லை.

பிப்ரவரி 12 ஆம் தேதி இரவு 9 மணி தொடங்கி,13,14&15 ஆம் தேதி காலை 9 மணி வரை இந்தியன் வங்கியில் பணப் பரிவர்த்தனை நடைபெறாது

எனவே, மற்ற வகுப்புகளையும் இந்த மாதத்திலேயே துவங்க , பள்ளி கல்வி துறை திட்டமிட்டு உள்ளது. ஆனால், அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை நடத்தும் அளவுக்கு, பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லை.பள்ளிகளுக்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி, 50 சதவீத இருக்கைகளை மட்டும், சமூக இடைவெளியுடன் பயன்படுத்த வேண்டும் என்பதால், இந்த இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே, மற்ற வகுப்புகளை திறக்க வேண்டும் என்றால், கொரோனா விதிகளை தளர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, ஆசிரியர்களும், பெற்றோரும் கூறிய தாவது:கொரோனாவின் தாக்கம் பெருமளவு குறைந்து விட்டதை, தினசரி சோதனைகளில் அறிய முடிகிறது. திருமண நிகழ்ச்சிகள், பொது இடங்கள், வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், ரயில்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஆகியவற்றில் கூட்ட நெருக்கடி உள்ளது.

பொதுமக்களும், சிறுவர், சிறுமியரும், நெருக்கமாக வெளியே சுற்றுகின்றனர்.எனவே, பள்ளி, கல்லூரிகளில், 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தும் வகையில் விதிகளை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அனைத்து வகைகளிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்ட நிலையில், பள்ளிகளை திறக்காததால், மாணவர்கள் தெருவில் விளையாடுவதும், ஊர் சுற்றுவதுமாக உள்ளனர்.எனவே, வருங்கால சந்ததிகளை நெறிப்படுத்தும் வகையில், விதிகளை தளர்த்தி, அனைத்து வகுப்புகளையும் திறக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment