ராமநாதபுரம் மாவட்டத் தில் வகுப்பறையில் போதிய இடவசதியில்லாத பள்ளியில் 9, பிளஸ் 1 மாணவர்களை அருகே உள்ள ஆரம்ப பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் (பிப்.,8 ல்) ஒன்பது, பிளஸ் 1 மாணவர்களுக்கு வகுப்பு நடத்த முன்ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி தலைமைவகித்தார்.
அரசு நெறிமுறைகளின்படி பெற்றோர்அனுமதி கடிதம் கொண்டு வரும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம்அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வகுப்பறை, பள்ளிவளாகம் கிருமிநாசினி மருந்து மூலம் சுத்தம் செய்யவேண்டும். சிறப்புவகுப்புகளை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமநாதபுரம் முத்துச்சாமி, மண்டபம் முருகம்மாள், பரமக்குடி கருணாநிதி மற்றும் அரசு, தனியார் பள்ளிமுதல்வர்கள், தலைமையாசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி கூறுகையில், மாவட்டத்தில் பரமக்குடியில் 6, ராமநாதபுரத்தில் 2, மண்டபத்தில் 4 பள்ளிகளில் வகுப்பறையில் இடவசதி குறைவாக உள்ளது. அவ்விடங்களில் அருகேயுள்ள ஆரம்ப பள்ளியில் ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளை நடத்த உள்ளோம், என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment