தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனியார் பள்ளிகள் வரும் மாணவர்களிடம் இருந்து 100 சதவீதம் கட்டணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
எனவே இதுகுறித்து பெற்றோர்கள் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment