தமிழகத்தில், கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்ததால், பள்ளி, கல்லுாரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மட்டும் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த வகுப்புகளுக்கு, பாடத் திட்டத்தில், சில பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படாத ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு, தனியார் பள்ளிகள், ஆன்லைனிலும், அரசு பள்ளிகளில் கல்வி, 'டிவி' வழியாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, தற்போதுள்ள பாடங்களை, பெரும்பாலான பள்ளிகள் முடிக்கும் தருவாயில் உள்ளன.
அவை மாணவர்களின் அடுத்த கல்விக்கு அடிப்படை தேவையான பாடங்கள்.எனவே, அனைத்து பாடங்களையும் ஆசிரியர்கள் நடத்தி, மாணவர்களை மூன்றாம் பருவ தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். தேர்வில் பாடங்களின் அளவு குறைக்கப்படுமா என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment