மின்வாரிய வேலைக்கு தேர்வு தேதி அறிவிப்பு - Kalvimurasutn

Latest

Saturday, February 13, 2021

மின்வாரிய வேலைக்கு தேர்வு தேதி அறிவிப்பு

 


தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள, உதவிப் பொறியாளர், இளநிலை உதவியாளர் பணிக்கு, ஆன்லைன் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள, 400 மின்னியல் உதவி பொறியாளர், 125 இயந்திரவியல் உதவி பொறியாளர், 75 கட்டடவியல் உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு, 2020 பிப்., 15ல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

விண்ணப்பதாரர்களுக்கு, ஏப், 24, 25, மே, 1, 2 ஆகிய நாட்களில், கணினி வழி தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், www.tangedco.gov.in என்ற மின் வாரிய இணையதளத்திலும், அவரவர், 'இ - மெயில்' முகவரியிலும் பார்வையிட்டு, உறுதி செய்து கொள்ளவும்.அதேபோல, 2020 ஜன., 8ல், 500 இளநிலை உதவியாளர் மற்றும் கணக்கு பதவிக்கு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பதவிக்கு, மே, 8, 9, 15, 16 ஆகிய நாட்களில், கணினி வழி தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.விண்ணப்பதாரர்கள், மின் வாரிய இணையதளத்திலும், அவரவர், 'இ - மெயில்' முகவரியையும் பார்வையிட்டு, உறுதி செய்து கொள்ளவும்.கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புதமிழ்நாடு மின் வாரியத்தில், 2,900 கள உதவியாளர் பயிற்சி பணியிடங்கள், நேரடி நியமனம் வழியே நிரப்பப்பட உள்ளன.

இதற்கு, 2020 மார்ச்சில், இணையதளம் வழியே, விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக, விண்ணப்பம் பெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கள உதவியாளர் பயிற்சி பணியிடத்திற்கான விண்ணப்பங்கள், இணையதளம் வழியே, பிப்., 15 முதல் மார்ச், 16 வரை பெறப்படும்.மேலும் விபரங்களை, www.tangedco.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment