தமிழகத்தில் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படாது என்றும், 9, 10 வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாது எனவும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து இதுவரை எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. அதனால் அந்த வகுப்புகளுக்கு பள்ளி திறப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment