CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது. பின்னர், ஜூன் மாதம் முதல் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தி வருகிறது.
இதனால், அந்தந்த மாநிலங்களில் உள்ள கொரோனா பாதிப்பை கொண்டு முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டது. சில மாநிலங்களில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டது. இதனிடையே வருகின்ற மார்ச் மாதம் முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்சி தேர்வு மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிப்பு – முதல்வர் ஆலோசனை!!
பத்தாம் வகுப்பிற்கு தேர்வு காலை 10:30 மணி முதல் 1.30 மணி வரை பொதுத்தேர்வு நடைபெறுகின்றன. அதேபோல 12 ம் வகுப்பிற்கு மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10:30 மணி முதல் 1.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அச்சமின்றி பதட்டம் இன்றி எதிர்கொள்ள வேண்டும் எனவும், பொதுத் தேர்வுகளை நடத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக உள்ளது என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
Click here to download Date sheet for class 10
Click here to download Date sheet for class 12
No comments:
Post a Comment