பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஜூனில் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணை, முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும்.தமிழகத்தில், கொரோனா தொற்றால், 2020 மார்ச்சில், பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் நடத்தாமல், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஏற்கனவே நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன.இதையடுத்து, 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.
அடுத்த மாதத்திற்குள் மாணவர்களுக்கு 80 ஆயிரம் ஸ்மார்ட் ஃபோன்கள் - அமைச்சர் தகவல்.
ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்படுகின்றன. அதனால், புதிய கல்வி ஆண்டில், சில மாதங்களாவது பள்ளிகளை திறந்து பாடம் நடத்த வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, ஜன., 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கு வரும், 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இந்நிலையில், பொதுத்தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட ஆலோசனையில், பொதுத்தேர்வை ஜூனில் நடத்த முடிவானது. மே கடைசி வாரத்தில் துவங்கி, ஜூன் வரை பொதுத்தேர்வை நடத்தலாம் என, கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.அட்டவணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment