ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள் அட்டவணை - அமைச்சர் செங்கோட்டையன் - Kalvimurasutn

Latest

Thursday, February 11, 2021

ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள் அட்டவணை - அமைச்சர் செங்கோட்டையன்

 


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் இணைக்கப்படாத ஏரி, குளங்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. அதற்கு பதிலாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்.

இன்றைய சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. தற்போது 98.5 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகிறார்கள்.

6,7,8-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் குறைப்பு: பள்ளிகள் திறக்கப்படுமா?

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறப்பாசிரியர்களுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் நிதி 5500 ரூபாய் மட்டும் தான். ஆனால் தமிழக அரசு ரூ.10 ஆயிரம் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் காலி பணி இடங்கள் நிரப்பபட்டுள்ளது.

ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள் அதற்கான அட்டவணை வெளியிடப்படும். நீட் தேர்வு இருமுறை நடத்துவது குறித்து மத்திய அரசு கடிதங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு எவ்வாறு நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.

10,12-ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்து பள்ளிகல்வித்துறை ஆலோசனையுடன் அட்டவணைகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment