தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளை தொடர்ந்து பெற்றோருக்கும் கரோனா தொற்று உறுதியானது. - Kalvimurasutn

Latest

Tuesday, March 16, 2021

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளை தொடர்ந்து பெற்றோருக்கும் கரோனா தொற்று உறுதியானது.


தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவி கள் 56 பேர் கரோனாவால் பாதிக் கப்பட்டுள்ள நிலையில், அவர் களது பெற்றோர்களில் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப் பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டதை யடுத்து, அந்த வகுப்பில் படித்த 460 மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதல்கட்ட ஆய்வு முடிவில் 20 மாணவிகளுக்கு தொற்று இருப் பது தெரியவந்தது.

அதன்பின், மற்ற வகுப்பு மாணவிகள் மற்றும் ஆசி ரியைகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 36 மாணவிகள், ஒரு ஆசிரியைக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. இவர்கள் அனைவரும் தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து 1 வருடம் நிறைவு! தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டின் நிலை?


பெற்றோருக்கும் பரவுகிறது

கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் 24 கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வருவதால், அந்த கிராமங்களில் மாணவிகளின் பெற்றோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இந்த சோத னையில் மாணவிகளின் பெற் றோர் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து, அவர்களும் தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அந்த கிராமங்களில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை மாணவிகள், ஆசிரியைகள், பெற்றோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த வர்கள் என மொத்தம் 1,079 பேருக்கு பரிசோதனை செய்யப் பட்டதில் 180 பேரின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், 56 மாணவிகள், ஒரு ஆசிரியை, 4 பெற்றோர் என 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மற்ற முடிவுகள் இன்னும் ஓரிரு தினங்களில் வெளி யாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


பரவியது எப்படி?

கரோனாவால் மாணவிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பள்ளிக்கு 2 வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் திடீரென இவ் வளவு பேருக்கு எப்படி கரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய வட்டாட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


கண்காணிப்புக் குழு

இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் வட்டாட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment