தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா நோய்த் தொற்று அதிகரிப்பதை தடுக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் சம்பந்தப்பட்ட துறைகளின் ஆய்வுக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
அண்மை காலங்களில் உலக அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிராவில் நாளொன்றுக்கு 16,000-க்கும் அதிகமாகவும், கேரளாவில் சுமார் 2,000 நபர்களுக்கும், கர்நாடகாவில் 900-க்கும், குஜராத்தில் 800-க்கு மேலும், டெல்லியில் 400-க்கு மேலும், பஞ்சாப் மாநிலத்தில் 1400-க்கு மேலும், நோய்த் தொற்று பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், நோய்த் தொற்று விகிதம் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், மாநிலத்தில் நோய்த் தொற்று ஒரு சதவிகிதமாக கொண்டு வரப்பட்டது. மேலும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சுமார் 500 நபர்களுக்கு கீழாக கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த 10 நாட்களாக படிப்படியாக நோய்த் தொற்றின் அளவு உயர்ந்து , தற்போது 1.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 2 சதவிகிதத்திற்கு சற்று மேலாகவும், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 1 சதவிகிதத்திற்கு மேலாகவும் உள்ளது.
தமிழக அரசின் முழுமையான அறிக்கையை பெற இங்கே கிளிக் செய்யவும்👇👇👇
No comments:
Post a Comment