இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனையடுத்து மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
அடுத்த கட்டமாக ஏப்ரல் 14ம் தேதி பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு ஆகியோர் நாடு முழுவதும் உள்ள ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. அதனால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. தடுப்பூசி போடும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்குகளும், வார இறுதி ஊரடங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா தொற்று பரவலில் முதல் இடத்தில் இருப்பதால் அங்கு 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி திருவிழாவும் நேற்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி தடுப்பூசி திருவிழா தொடங்குகிறது. இந்நிலையில் தொற்று பரவல் மற்றும் தடுப்பூசி போடுவது குறித்து பிரதமர் மாநில ஆளுநர்களுடன் ஆலோசிக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் நாளை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment