தமிழகத்தில் CORONA நோய் தடுப்பூசி கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் நோய்த்தடுப்பு தடுப்பூசிகளை மத்திய அரசு குறைந்த அளவிலேயே மாநிலங்களுக்கு வழங்கியது. இதனால் மாநில அரசு முன்னுரிமை அடிப்படையில் மக்களுக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்தது. அதன்படி, முன்களப்பணியாளர்களான காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு மட்டும் முதலில் தடுப்பூசி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தடுப்பூசிகள் தேவையான அளவில் தயாரிக்கப்பட்ட பின்னர் அனைவரும் பெற்றுக் கொள்ளும் வகையில் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்படி முதலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் நீண்ட கால நோயாளிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியது. தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் வகையிலும் தடுப்பூசிகள் அதிகம் வரத்தொடங்கியது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர்:
அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக இரண்டு வரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், தொழிற்சாலைகள், உணவகங்கள், மார்க்கெட் போன்ற பகுதியில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகளை செய்தால் அரசு உதவி புரிய தயாராக உள்ளது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment