ஆன்லைன் நீட்' பயிற்சி பெறுவோருக்கு வசதியாக, மொபைல் போன் செயலியை மத்திய அரசு வடிவமைத்துள்ளது.
கொரோனா பரவும் இந்த சிக்கலான சூழலில், ஜே.இ.இ., - நீட் போன்ற போட்டித்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதுவரை, தேர்வுக்கு விண்ணப்பித்த பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.திருப்பூரில், 720 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்கள் பதிவு செய்து ஆன்லைன் பயிற்சி எடுத்து வருகின்றனர். தற்போது, மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுத, 'National Test Abhyas' எனும் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:நாடுமுழுவதும், ஒரு மில்லியன் பேர் இதுவரை இச்செயலியை பதிவிறக்கம் செய்து தேர்வுக்கு பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இருப்பினும், அரசு பள்ளி மாணவர்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு குறைவு. மாணவர்கள் தங்கள் அடிப்படை விவரங்கள் கொடுத்து உள்ளே நுழைந்தால் போதும்.பாடப்பிரிவு வாரியாக, ஆண்டு வாரியாக வினாத்தாள்கள் இடம்பெற்றுள்ளன. விரும்பும் பாடத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்வு எழுதி சுயமதிப்பீடு செய்து கொள்ளலாம். இதனை பொறுப்பாசிரியருக்கு தினமும் எழுதி அனுப்பலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment