பொது மருத்துவ கலந்தாய்வு - புதிய அட்டவணை வெளியீடு. - Kalvimurasutn

Latest

Friday, November 27, 2020

பொது மருத்துவ கலந்தாய்வு - புதிய அட்டவணை வெளியீடு.

 



தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு மூலம் கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற வேண்டிய 2020 -2021 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவ கலந்தாய்வு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் நிவர் புயல் உருவானது இதன் காரணமாக பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

நிவர் புயலால் மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதனை கருத்தில் கொண்டு மருத்துவ கல்வி இயக்ககம் நவம்பர் 24 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறவிருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பதாக அறிவித்தது. மேலும் அந்த கலந்தாய்வுக்கான மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தது.

தற்போது மருத்துவ கல்வி இயக்ககம் ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வுக்கான தேதி அறிவித்துள்ளது.அதன்படி நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 10 தேதி வரை மருத்துவ கலந்தாய்வு நடைபெற உள்ளது. நவம்பர் 30ஆம் தேதியன்று நீட் தேர்வில் 610 முதல் 630 மதிப்பெண்கள் எடுத்தவர்களும் டிசம்பர் 1ஆம் தேதி 592 முதல் 609 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும் டிசம்பர் 2ஆம் தேதி 571 முதல் 591 மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்கான பட்டியலை மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.


Click here download revised counselling schedule


No comments:

Post a Comment