CBSE பொதுத் தேர்வை மே வரை தள்ளிவைக்க வேண்டும்- ட்விட்டர் மூலம் மாணவர்கள் கோரிக்கை - Kalvimurasutn

Latest

Monday, December 7, 2020

CBSE பொதுத் தேர்வை மே வரை தள்ளிவைக்க வேண்டும்- ட்விட்டர் மூலம் மாணவர்கள் கோரிக்கை

சிபிஎஸ்இ பொதுத்தேர்வை மேமாதம் வரை தள்ளிவைக்க வேண்டும் என்று மத்திய கல்விஅமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு ட்விட்டர் மூலம் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கரோனா பாதிப்பு காரணமாககடந்த மார்ச் முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க பாடத்திட்டத்தில் 30 சதவீதம் வரை சிபிஎஸ்இ குறைத்தது.

மத்திய கல்வி அமைச்சருக்கு...

இந்நிலையில், சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்துட்விட்டர் மூலம் கருத்துகளை தெரிவிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதன்படி, ட்விட்டரில் #EducationMinisterGoesLive என்றஹேஷ்டேக் மூலம் கல்வி அமைச்சரிடம் தங்களின் கருத்துகளை மாணவர்கள் தெரிவித்து வந்தனர். அதில், பெரும்பாலான கருத்துகள் பொதுத்தேர்வை மே மாதம் வரைதள்ளிவைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தங்களுக்கு குறைந்தது 3 மாத காலமாவது நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு நடத்தினால் மட்டுமே பொதுத்தேர்வை தங்களால் எதிர்கொள்ள முடியும் என்றும்மாணவர்கள் கருத்து தெரிவித்துள் ளனர்.

10-ம் வகுப்புக்கு இணையவழியில் நடைபெறும் வகுப்புகளில் பாடத்திட்டம் இன்னும் முடிக்கப்படவில்லை. தற்போது தேர்வு நடத்தினால் நல்ல மதிப்பெண் எடுக்கமுடியாது. எனவே, பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இணையவழி வகுப்புகளில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ‘ஸ்கிரின்சாட்’ எடுத்தும் அமைச்சருக்கு மாணவர்கள் அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே, மாணவர்களின் கருத்துகளைத் தொடர்ந்து, அவர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வரும் 10-ம் தேதி விளக்கம்அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment