தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கும் நோக்கில் புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
கற்போம் எழுதுவோம் இயக்கம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த திட்டத்தை மாநில பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 3 லட்சம் பேருக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் எழுத்தறிவு கல்வி வழங்க பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் திட்டமிட்டு, தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் கற்போர் கல்வியறிவு மையங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் புதிய வயது வந்தோர் கல்வி மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மையங்களை திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பள்ளியின் தலைமையாசிரியர் ஆர்.ஏஸ். இளங்கோவன் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் விஜயகுமார், நரசிம்மன் மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment