கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் வந்தபின் பெற்றோர்களிடம் ஆலோசனை கேட்டு பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்.
கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் தமிழக அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் ஈரோடு வேளாளர் கல்லூரியில் தனியார் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு அங்கீகார சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எம்எல்ஏக்கள் ராமலிங்கம், தென்னரசு, தோப்பு வெங்கடாசலம், ஈஸ்வரன் எம்.ஆர்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,”
தமிழகத்தில் ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்து கேள்விப்பட்டேன் அதனால் இந்த சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டுஅறிந்த பின் தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் சில பள்ளிகளில் கல்விக்கட்டணம் பெற்றுக்கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தாமல் உள்ள 14 பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment