தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீட்டு எண்: 54/2020
செய்திக்குறிப்பு
நாள்: 21.12.2020
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 01/2020 நாள். 20/01/2020 ன் தொடர்ச்சியாக அறிவிக்கை செய்யப்பட்ட தொகுதி 1 தேர்வுகளில் அடங்கிய பதவிகளுக்கு திட்டமிடப்பட்ட முதன்நிலைத் தேர்வு (Preliminary Examination) 03.01.2021 அன்று முற்பகல் மட்டும் 32 மாவட்டங்களில் 856 தேர்வுக்கூடங்களில் நடைபெற உள்ளது
முதன்நிலைத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் எண்ணினை ஒரு முறை பதிவேற்றத்தில் (OTP) இணைத்தால் மட்டுமே தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் எண்ணினை ஒரு முறை பதிவேற்றத்தில் (OTR) இணைத்தால் மட்டுமே, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket), பதிவிறக்கம் செய்ய முடியும்
மேலும், விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட அறிவுரைகளை கவனமாக குறித்து கொள்ளவும்
அ. தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை, பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் தவறினால் அவ்வாறான விடை தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாதாகக்பபடும் .
ஆ. எந்த ஒரு தேர்வரும் முற்பகல் 9.15 மணிக்குப் பின்னர் தேர்வுகூடத்திற்குள் நுழையவோ மற்றும் பிற்பகல் 1.15 மணிக்கு முன்னர் தேர்வுகூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்
இரா. சுதன், இ.ஆ.ப. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்
No comments:
Post a Comment