தமிழகத்தில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க இருக்கின்றன அவ்வாறு திறக்கப்படும்போது கல்லூரிகளில் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி
கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்கள் இயங்கும்.
கல்லூரி விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும்.
முடிந்தவரை மாணவர்கள் அருகில் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளில் தங்குவதற்கு அறிவுறுத்த வேண்டும்.
தோற்று அறிகுறி இருந்தால் அந்த மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கல்லூரிகளில் நீச்சல் குளங்கள் இருந்தால் அவைகள் முழுமையாக மூடப்பட வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment