அரசின் உத்தரவை மீறி மாணவர்களை கல்லூரிகள் அழைத்தால் அந்த கல்லூரி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசு அனுமதித்துள்ள இறுதியாண்டு முதுகலை மாணவர்களை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் எக்காரணம் கொண்டும் நேரில் அழைக்க கூடாது என்று உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன இந்த நிலையில் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 2-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இறுதியாண்டு மாணவர்களை தவிற பிற மாணவர்களை கல்லூரிக்கு நேரில் அழைக்க கூடாது - உயர்கல்வித்துறை எச்சரிக்கை!

இந்தநிலையில் சில கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை நேரடியாக கல்லூரிகளுக்கு வரவேண்டுமென அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித் துறை வட்டாரங்களில் கேட்டபோது அரசு முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகளை திறக்க அனுமதித்து உள்ளதாகவும் பிற ஆண்டு மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டுமென நிர்பந்திக்க கூடாது என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அவ்வாறு மாணவர்களை கல்லூரிக்கு வரவழைப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த கல்லூரி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment